பிரேசிலில் 26 மாடிகள் கொண்ட கட்டிடத்தில் எற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் பலர் காயமுடன் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பிரேசில் நாட்டின் சா பாலோ(Sao Paulo) என்ற  நகரில்உ ள்ள 26 மாடிகளை கொண்ட கட்டிடத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து செயல்பட்டு, அங்கிருந்தவர்களை அவசர வழியாக மீட்டனர். 57 தீயணைப்பு வாகனங்களில் வந்த நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் விரைந்து பணியாற்றிதன் காரணமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டதாக கூறப்படகிறது.

இந்த தீவிபத்தின்போது கட்டிடத்தின் மேற்பகுதியில் நின்றவர், கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந் ததில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 3 பேரை காணவில்லை என்று கூறப்படுகிறது. அவர்களும் இடிந்து விழுந்த இடிபாடுகளில் சிக்கி இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

[youtube-feed feed=1]