குற்றாலம்
குற்றால அருவிகளில் நீர் வரத்து குசீரானதை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது,

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது . அதிலும் தென்காசி மாவட்டத்தில் பெய்த மழையால் குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்தது.
எனவே பாதுகாப்பு கருதி குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. தற்போது குற்றால அருவிகளில் நீர்வரத்து குறைந்து சீராகியுள்ளது.
இவ்வாறு நீர்வரத்து சீரானதை தொடர்ந்து, குற்றாலம், மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது .
Patrikai.com official YouTube Channel