தென்காசி: குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குதுகலத்துடன் நீராடி மகிழ்கின்றனர்.
ஆண்டுதோறும், கோடை வெயில் கொளுத்தும் காலமான, ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் குற்றாலம் சீசன் களைகட்டும். இதனால், கோடை வெயிலை சமாளிக்க, நாடு முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகள் குற்றாலத்தை நோக்கி படையெடுத்து வருவார்கள். இந்த ஆண்டு மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளிலும் தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கியவுடன் கேரளாவில் மழை பெய்யத் தொடங்கியதம், குற்றாலம் அருவிகளில் சீசன் தொடங்கியது. இதனால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதியது.
இதற்கிடையில், மேற்குதொடர்ச்சிமலைப் பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலாப் பயணிகளை குளிக்க மாவட்ட நிர்வாகம் அவ்வப்போது தடை விப்பதும், பின்னர் தடை விலக்குவதுமாக இருந்து வந்தது. இந்த நிலையில், தற்போது குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்த நிலையில், மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இருந்தாலும் குற்றாலம் பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. இதை சுற்றுலா பயணிகள் இதை சுற்றலா பயணிகள் மகிழ்ச்சியுடன் எஞ்சாய் செய்து வருகின்றனர்.
பல மாநிலங்களில் இருந்தும், பல மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் ஒவ்வொரு நாளும் சுற்றுலாப் பயணிகள் குற்றால அருவிக்கு வருகை தருகின்றனர். இதனால், குற்றாலம், தென்காசி பகுதிகளில் கூட்டம் அலைமோதுகிறது. இந்த நிலையில், இன்று (ஜூலை 8) காலை முதல் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதனால் அருவிகளில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் உற்சாகத்துடன் குளித்து மகிழ்ந்தனர். ற்பொழுது குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்து மகிழ்ந்து வருகின்றனர். தொடர்ந்து சாரல் மழையும், வெயிலும் மற்றும் இதமான காற்றும் வீசுவதால் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.