சென்னை: தமிழகஅரசு தனியார் நிறுவனத்துடன் இணைந்து அறிமுகப்படுத்தி உள்ள  சொகுசு சுற்றுலா கப்பலுக்கு புதுச்சேரி அரசு அனுமதி மறுத்துள்ளதால், அந்த கப்பல் நடுக்கடலில் நிறுத்தப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழகஅரசு கடல்சுற்றுலா என்ற பெயரில் தனியார் நிறுவனத்துடன் இணைந்து சொகுசு கப்பலில் சுற்றுலா செல்லும் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.   தமிழக மக்களுக்கு சொகுசு கப்பலின் புதிய அனுபவத்தையும், திகில் நிறைந்த ஆழ்கடல் பயண அனுபவத்தையும் அளிக்கும் வகையில் தமிழக அரசின் சுற்றுலாத்துறை ஏற்பாட்டில் ‘கார்டிலியா குருயிசஸ்’ என்ற தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. 2 நாள், 3 நாள் மற்றும் 5 நாள் என்ற வகையில் சொகுசு கப்பலின் பயணத்திட்டங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் படிக்க சென்னை துறைமுகத்தில் கார்டிலியா என்கிற கப்பல் நிறுவனத்துடன் இணைந்து சொகு கப்பல் சுற்றுலா திட்டத்தை தமிழக சுற்றுலாத்துறை அறிமுகம் செய்தது. சென்னையில் இருந்த புதுச்சேரி, விசாகப்பட்டினத்துக்கு சொகுசு கப்பலில் மக்கள் பயணம் செய்யும் வகையில் சொகுசு கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2 நாள், 3 நாள் மற்றும் 5 நாள் என்ற வகையில் சொகுசு கப்பலின் பயணத்திட்டங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் பார்வசதி, ஸ்பா என அனைத்து வசதிகளும் உள்ளன.

இந்த திட்டத்தை கடந்த 5ந்தேதி  மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முன்னதாக அவர் கப்பலில் ஏறி, அதில் உள்ள அம்சங்களை நேரில் பார்வையிட்டார். கேப்டன் டேனிஸ் கொரூப் கப்பலில் உள்ள நவீன மற்றும் சொகுசு வசதிகள் குறித்து முதல்-அமைச்சரிடம் விளக்கி கூறினார்.

இந்த கப்பல் நேற்று மீண்டும் தனது சொகுசு சுற்றுலா பயணத்தை தொடங்கியது.  நேற்று காலை 8மணி அளவில் சென்னையில் இருந்து புறப்பட்டு சென்ற சொகுசு கப்பலுக்கு புதுச்சேரி அரச அனுமதி  வழங்க மறுத்துள்ளது. இதனால், அந்த சொகுசு கப்பல் நடுக்கடலில் நிற்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  புதுச்சேரி அரசு அனுமதி அளிக்காத நிலையில் கீரப்பாளையம் லைட் ஹவுஸ் அருகே சொகுசு கப்பல் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்த புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்,   தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கு வரும் சொகுசு கப்பலுக்கு, புதுச்சேரி அரசு எந்த அனுமதியும் அளிக்கவில்லை. அது தொடர்பான எந்த கோப்பும் எனக்கு வரவில்லை. சொகுசு கப்பல் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வரவில்லை. புதுச்சேரியில் சுற்றுலாவை மேம்படுத்துவது அரசின் எண்ணம். அதே நேரத்தில் வருமானத்திற்காக, கலாசாரத்தை சீரழிக்கும் வகையிலான சுற்றுலாவிற்கு அனுமதி அளிக்க மாட்டோம் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.