பாரிஸ்
கொரோனாத் தொற்று காரணமாக பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் புகழ்பெற்ற சைக்கிள் போட்டியான “டூர் டி பிரான்ஸ்” ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனை சர்வதேச சைக்கிள் கூட்டமைப்பு (UCR) இன்று அறிவித்தது.
23 நாட்களாக நடைபெறும் இப்போட்டி உலகின் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வுகளில் ஒன்றாகும்.
3500 கிமீ வரை கடக்கும் இவ்விளையாட்டில் பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் ஆகிய மூன்று நாடுகளும் இப்போட்டியின் களமாக அமையும்.
தற்போது இம்மூன்று நாடுகளும் கொரோனாவால் கடும் விளைவை சந்தித்து வருகின்றன. பலி எண்ணிக்கை இந்நாடுகளில் 15000 ஐ கடந்துள்ளன. ஊரடங்கும் நடைமுறையில் உள்ளது. எனவே ஜூன் – ஜூலை இல் போட்டிகளை நடத்துவது சாத்தியமில்லை.
உலகெங்கும் கொரோனாவால் பெரும் இழப்புகள் ஏற்பட்டுவரும் சூழலில் டூர் டி பிரான்ஸ் போட்டிகள் ஜூன் மாதத்திலிருந்து ஆகஸ்ட் 20 – செப்டம்பர் 20 க்கு மாற்றப்படுவதாக சர்வதேச சைக்கிள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
முன்னதாக பிரான்ஸ் அதிபர் “உலகின் மதிப்புமிக்க, மிகவும் சவாலான சைக்கிள் ரேஸ் வலிமிகுந்த காரணத்தால் ஒத்தி வைக்கப்படுவதாக” கூறியிருந்தார்.
1903 முதல் நடைபெற்று வரும் இப்போட்டி உலகப் போர் காரணமாக மட்டுமே தடைபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.