டெல்லி

ந்திடாவில் மொத்தம் 199.41 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு பரவ ஆரம்பித்த கொரோனா நோய், நாளடைவில் உலகம் முழுவதும் பரவி பல உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. இது ஒரு புதிய வைரஸ் தொற்று என்பதால், அதில் இருந்து பாதுகாக்க போதுமான மருத்துவ வசதிகளும் ஆரம்பத்தில் இல்லை என்பதால் அதற்கான தடுப்பூசிகளை கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் கவனம் செலுத்தின.

ரஷியாவின் ஸ்புட்னிக் தடுப்பூசி, இந்தியாவின் கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகள் உலகளவில் பயன்படுத்தப்பட்டன. இந்தியாவில் இந்த தடுப்பூசிகளை 2 தவணையாக செலுத்திக் கொள்ள அந்த நேரத்தில் மத்திய அரசால் அறிவுறுத்தப்பட்டு அதற்கான பணிகளும் நடந்தன.

கடந்த 2022 ஆம் ஆண்டு வரை உச்சத்தில் இருந்து, பின்னர் 2023 மற்றும் 2024-ம் ஆண்டுகளில் நோய்த்தொற்றின் தீவிரத்தன்மையும், இறப்பு விகிதமும் குறைந்திருந்தது. ஆயினும் வெவ்வேறு வகையில் கொரோனா வைரஸ் உருமாறி தற்போது பெரும் பாதிப்பை கொடுக்காமல் சாதாரண காய்ச்சல் என்ற நிலைக்கு மட்டுமே மாறியுள்ளதே தவிர, அது முற்றிலும் மறைந்துவிடவில்லை.

இந்தியாவில் 2 தவணைகளாக செலுத்தப்பட்ட தடுப்பூசிகள் எண்ணிக்கை எ குறித்து மத்திய அரசின் புள்ளி விவரங்களிபடி, 102 கோடியே 36 லட்சத்து ஆயிரத்து 766 முதல் தவணை தடுப்பூசிகளும், 95 கோடியே 5 லட்சத்து 53 ஆயிரத்து 629 2-வது தவணை தடுப்பூசிகளும் என மொத்தம் 197 கோடியே 41 லட்சத்து 55 ஆயிரத்து 395 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்கின்றன.