நியுடெல்லி:
சிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் நடைபெற்ற 57 கிலோ எடைப் பிரிவில் கிர்கிஸ்தானின் அல்மாஸ் ஸ்மான்பெகோவை வீழ்த்தி அமன் செஹ்ராவத் இந்தியாவின் முதல் தங்கப் பதக்கத்தை வென்றார்.

தற்போது நடைபெற்று வரும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற 57 கிலோ எடைப் பிரிவில் கிர்கிஸ்தானின் அல்மாஸ் ஸ்மான்பெகோவை வீழ்த்தி அமன் செஹ்ராவத் இந்தியாவின் முதல் தங்கப் பதக்கத்தை வென்றார். டெல்லியின் புகழ்பெற்ற சத்ரசல் ஸ்டேடியத்தில் பயிற்சி பெறும் அமான், 2023 சீசனில் தனது இரண்டாவது போடியத்தை முடித்தார். முன்னதாக பிப்ரவரி மாதம் நடந்த ஜாக்ரெப் ஓபனில் வெண்கலம் வென்றிருந்தார்.