இந்திய பருத்தியின் மீதான இறக்குமதி தடை: நீக்கியது பாகிஸ்தான்

Must read

இஸ்லாமாபாத்: இந்திய பருத்தி மீதான இறக்குமதி தடையை பாகிஸ்தான் நீக்கியது.

2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. அதையடுத்து, இந்தியாவுடனான வா்த்தக உறவை  பாகிஸ்தான் முறித்துக் கொண்டது.

தற்போது பாகிஸ்தானில் பருத்தி உற்பத்தி குறைந்துள்ளதால், விலை கடுமையாக உயா்ந்துள்ளது. பருத்தியின் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் அரசு தெரிவித்தது.

இந் நிலையில், இந்திய பருத்தி மீதான இறக்குமதி தடையை பாகிஸ்தான் நீக்கியது. இது குறித்து பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஜெர்மனியும், பிரான்சும்  மோதிக் கொண்டாலும் வர்த்தக ரீதியாக நல்ல உறவில் உள்ளது. அதுபோல இந்தியாவும், பாகிஸ்தான் திகழும் என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இந்திய மருந்துகள், மூலப் பொருட்கள் மீதான இறக்குமதிக்கு விதித்த தடையை பாகிஸ்தான் நீக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article