டெல்லி: ஆயிரக்கணக்கான தகவல் தொழில்நுட்ப ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப முன்னணி நிறுவனங்கள் முடிவு செய்திருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
சமீபகாலமாக, இந்தியாவில் ஐடி துறையில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். முன்னணி நிறுவனங்களான காக்னிசென்ட், இன்போசிஸ் அதிரடி நடவடிக்கையால் ஊழியர்கள் பெரும் அதிருப்திக்கு ஆளாகி உள்ளனர்.
அதை மேலும் வலுப்படுத்தும் விதமாக, 10,000 முதல் 20,000 ஊழியர்களை (அதாவது 5% முதல் 8%) வீட்டுக்கு அனுப்பும் திட்டத்தில் பல முன்னணி நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. அதாவது அடுத்த காலாண்டுக்குள் இந்த நடவடிக்கைக்கு செயல்வடிவம் கொடுக்க அவை தயாராகி வருகின்றனர்.
யார், யாரை வீட்டுக்கு அனுப்பலாம் என்ற கணக்கீட்டையும் அந்த நிறுவனங்கள் முடிவு செய்திருக்கின்றன. திட்ட மேலாளர்களாக இருக்கும், ஆண்டுக்கு 20 லட்சம் முதல் 40 லட்சம் வரை ஊதியம் பணியாளர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட உள்ளனர்.
நிறுவனங்களின் இந்த நடவடிக்கையால், அடுத்த காலாண்டுக்குள் வேலை வாய்ப்புக்காக காத்திருப்போரின் சதவீதம் மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.