சென்னை
ரேஷன் கடைகளில் விரைவில் துவரம்பருப்பு, பாமாயில் விலை உயரலாம் எனக் கூறப்படுகிறது.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழகத்தில் சிறப்பு வினியோகத் திட்டத்தின் கீழ் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. தமிழ்க அரசு இந்த சிறப்பு வினியோகத் திட் \ட பொருட்களாக பருப்பு மற்றும் பாமாயில் ஆகியவற்றை வெளிச்சந்தையில் அதிக விலைக்கு வாங்கி குறைந்த விலைக்கு வினியோகித்து வருகிறது.
கடந்த 2007-ம் ஆண்டு முதல் ரேஷன் கடைகளில் பருப்பு ஒரு கிலோ ரூ.30-க்கும், பாமாயில் ஒரு லிட்டர் ரூ.25-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருவதால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் பயன் அடைந்து வருகிறார்கள்.
கடந்த 2007-ம் ஆண்டு அரசு ஒரு கிலோ பருப்பை 50 ரூபாய்க்கு வெளிச்சந்தையில் வாங்கி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.30-க்கு வழங்கியது., பாமாயிலை ரூ.45-க்கு வாங்கி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.25-க்கு வழங்கியது.
வெளிச்சந்தையில் பருப்பு, பாமாயில் ஆகியவற்றின் விலை பன்மடங்கு உயர்ந்துவிட்டத்ஹால். கடந்த 2014-15-ம் ஆண்டு தமிழக அரசு பருப்பு, பாமாயில் ஆகியவற்றை கொள்முதல் செய்வதற்கு கொடுத்த ரூ.1,800 கோடி மானியம் தற்போது இந்த மானியத்தொகை ரூ.3,800 கோடியாக உயர்ந்துள்ளது.
துவரம் பருப்பு வெளிச்சந்தையில் ஒரு கிலோ ரூ.155 வரை விற்பனை செய்யப்படுகிறது., ஒரு லிட்டர் பாமாயில் ரூ.95 வரை அதிகரித்து உள்ளது. ஆனால் தமிழக அரசு இந்த விலைக்கு கொள்முதல் செய்தாலும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பருப்பு கிலோ ரூ.30-க்கும், பாமாயில் ரூ.25-க்கும் மட்டுமே வினியோகிக்கப்பட்டு வருகிறது..
ஆகவே ரேஷனில் வழங்கும் பருப்பு, பாமாயில் விலையை அதிகரிக்கலாமா என்று ஆலோசிக்கப்படுவதாகவும், இதுவரை எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விரைவில் ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படும் பருப்பு, பாமாயில் விலை உயர்த்தப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.