சென்னை
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்நாளை நீலகிரிசெல்கிறார்.
தமிழ்க முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநிலம்முழுவதும் உள்ள மாவட்டங்கள்தோறும் கள ஆய்வு மேற்கொண்டு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். இவ்வரிசையில் வருகிற 6-ம் தேதி நீலகிரி மாவட்டத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் செல்வதற்காக அவர் இன்ரு காலை 10 மணிக்கு கோவை சென்று அங்கிருந்து ஊட்டி செல்கிறார்.
நாளை ஊட்டி அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, நீலகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட 1,703 முடிவுற்ற திட்டப்பணிகளை ரூ.494.51 கோடி மதிப்பீட்டில் திறந்து வைத்து, ரூ.130.35 கோடி மதிப்பீட்டில் 56 புதிய வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.102.17 கோடி மதிப்பீட்டில் 15,634 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். பின்னர் சிறப்புரை ஆற்றுகிறார்.
இந்த விழாவில், அமைச்சர்கள், மாவட்ட ஆட்சி தலைவர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர். முதல்-அமைச்சர் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.