ஸ்ரீநகர்,
சமீபகாலமாக காஷ்மீரில் மாநிலத்தில் அரசு படைகளுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையேயான மோதல் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில், நாளை இந்திய குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், சக்தி வாய்ந்த பிரஷர் குக்கர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது அந்த பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகர் பகுதியில்உ ள்ள கன்டிசால்-டங்போரா புறவழிச்சாலையில் இந்த பிரஷர் குக்கர் குண்டு பிடிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து மிகுந்து காணப்படும் பரபரப்பான இந்த சாலையில், ராணுவம் அடிக்கடி ரோந்து செல்வதும் உண்டு.
இந்நிலையில், வழக்கமாக ராணுவத்தின் அந்த சாலையில் ரோந்து சென்றபோது, சாலையோரத்தில் சமையல் செய்யும் பிரஷர் குக்கர் ஒன்று அனாமேதயமாக கிடந்துள்ளது.
இதைகண்ட பாதுகாப்பு படையினர், சந்தேகமடைந்து, அதனருகில் சென்று சோதனை செய்தனர். அப்போது, அந்த குக்கரினுள் சக்திவாய்ந்த வெடிகுண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து உடனடியாக சாலையை மூடப்பட்டு, வெடிகுண்டு செயல் இழப்பு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு செயல் இழக்க செய்தனர்.
இதுகுறித்து கூறிய பாதுகாப்பு படை அதிகாரி, குக்கரில் இருந்தது சக்திவாய்ந்த வெடிகுண்டு என்றும், இந்த வெடிகுண்டு வெடித்திருந்தால் பலத்த உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும். சரியான நேரத்தில் கண்டுபிடித்து செயல் இழக்க செய்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது என்று கூறி உள்ளார்.