சென்னை:
நாளை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமென்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படவிருக்கிறது. இதனையொட்டி சென்னையிலிருந்து பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றிருக்கின்றனர். அங்கு அவர்கள் புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து, கடவுளை வழிபட்டு தங்களது பண்டிகை கொண்டாட்டத்தை ஆரம்பித்திருக்கின்றனர். அதேசமயம், தீபாவளிவரைவிடப்பட்டிருந்த விடுமுறை நாளையும் (செவ்வாய் கிழமை) நீடிக்குமா என்ற கேள்வியும், தீபாவளிக்கு மறுநாளே பள்ளிகள் திறந்தால் மாணவர், மாணவிகள் சிரமப்படுவார்கள். எனவே அன்றைய தினம் விடுமுறை விடவேண்டுமென்ற கோரிக்கையும் எழுந்தது.

இந்நிலையில் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை விடப்படுமென்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், “இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை கொண்டாடும் பொருட்டு சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஏதுவாக அக்டோபர் 25ஆம் தேதி ஒரு நாள் மட்டும், தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகள். கல்லூரிகள் மற்றும் அனைத்துக்கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் நவம்பர் 19 அன்று பணி நாளாக அனுசரிக்கப்படும்” என குறிப்பிட்டுள்ளது.