திருப்பதி

நாளை திருப்பதி கோவில் பிப்ரவரி மாதத்துக்கான சிறப்பு தரிசன டிக்கட்டுகள் வெளியாகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி, டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி முதல் தொடர்ந்து 10 நாட்கள் சொர்க்கவாசல் திறந்திருக்கும்.

கடந்த 10 ஆம் தேதி சொர்க்கவாசல் பிரவேசத்திற்குத் தேவையான 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைனில் திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டது.

தினமும் 25,000 டிக்கெட்டுகள் வீதம் 10 நாட்களுக்கான 2 லட்சத்து 25 ஆயிரம் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி மாத சிறப்பு தரிசனத்திற்கான சீட்டுகள் நாளை வெளியிடப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

ஆகவே பக்தர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தரிசன டிக்கெட் மற்றும் அறைகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது..