டெல்லி

நாளை ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வயநாடு செல்ல உள்ளனர்.

நேற்று கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை, மற்றும் சூரல்மலை ஆகிய இடங்களில் தொடர் கனமழையால் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. ப்லர் கண் மூடி தூங்கிய வேளையில் மண் மூடி மடிந்தனர். இதுவரை சுமார் 200க்கும் அதிகமானோர் நிலச்சரிவில் சிக்கி பலியாகியுள்ளனர். போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், வயநாடு தொகுதி முன்னாள் எம்.பியுமான ராகுல் காந்தி, பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூற இன்று வயநாடு செல்ல திட்டமிட்டு இருந்தார். காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் அவர்டன் செல்ல இருந்தார். ஆனால் ராகுல் காந்தியின் வயநாடு பயணம் நேற்று இரவு திடீரென ரத்து செய்யப்பட்டது. கேரளாவில் தொடர் மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக, விமானம் தரையிறங்குவதில் சிக்கல் உள்ளதால், பயணம் ரத்து செய்யப்பட்டது.

எனவே வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ராகுல்காந்தி நாளை பார்வையிட உள்ளார். ராகுலுடன், பிரியங்கா, கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோரும் நாளை செல்கின்றனர். அவர்கள் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் கூற உள்ளனர்.