டெல்லி
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி எம்ப் நாளை வயநாடு செல்கிறார்.

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலரும் எம்.பி யுமான. பிரியங்கா காந்தி 3 நாள் சுற்றுப்பயணமாக வயநாட்டிற்கு நாளை (சனிக்கிழமை) சென்று நாளை முதல் 10-ந் தேதி வரை வயநாட்டில் தங்கி இருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.
அப்போது சட்டமன்ற தொகுதி வாரியாக காங்கிரஸ் கட்சியில் உள்ள வாக்குச்சாவடி தலைவர்கள், முகவர்கள் சங்கமம் நிகழ்ச்சியில் பிரியங்கா கலந்துகொண்டு பேசுகிறார். பிரகு நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மானந்தவாடி அருகே 4-ம் மைல் பகுதியில் உள்ள அரங்கில் வாக்குச்சாவடி தலைவர்கள், முகவர்கள் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்துரையாடுகிறார்.
பிறகு மதியம் 12 மணிக்கு சுல்தான்பத்தேரியில் நடைபெறும் காங்கிரஸ் தலைவர்கள் கலந்துகொள்ளும் கூட்டத்தில் பேசுகிறார் இதைத் தொடர்ந்து நடைபெறும் நிகழ்ச்சிகளில் பிரியங்கா காந்தி பங்கேற்கும் அவர் 10 ஆம் தேதி வயநாட்டில் இருந்து டெல்லி திரும்புகிறார்.