புதுச்சேரி:

ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் மருத்துவம் படிப்பதற்கான நுழைவுதேர்வு நாளை நாடு முழுவதும் நடைபெறுகிறது.

2017-ம் ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பிற்கான ஜிப்ர் நுழைவு தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.

இரண்டு பகுதிகளாக நடைபெறும் இந்த  நுழைவு தேர்வில் 1 லட்சத்து 89 ஆயிரத்து 663 மாணவர்கள் பங்கு பெறுகின்றனர்.

இதில் காலையில் 83 ஆயிரத்து 720 மாணவர்களும், பிற்பகல் 1 லட்சத்து 5 ஆயிரத்து 943 மாணவர்களும் தேர்வு எழுத உள்ளனர்.

தேர்வு நாடு முழுவதும்  75 நகரங்களில் உள்ள 339 மையங்களில் நடைபெற உள்ளது.

காலை நடைபெற இருக்கும்  தேர்வு காலை 10 மணி முதல் 12.30 மணி வரையும், மதியம் நடைபெற இருக்கும் தேர்வு பிற்பகல் 3 மணி முதல் 5.30 மணி வரையும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மாணவர்கள் உரிய பரிசோதனைக்கு பிறகே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். ஏற்ககனவே அறிவித்துள்ளபடி அடையாள அட்டைகள்,  மாணவர்கள் ஆதார் கார்டு, இ.ஆதார் கார்டு, பாஸ்போர்ட் ஆகிய அடையாள அட்டை கொண்டு வர வேண்டும்.

மொபைல் போன்கள் செயல்படாதவாறு  ஜாமர் கருவிகள், கண்காணிப்பு கேமராக்கள்  தேர்வு மையங்களில் பொருத்தப்பட்டுள்ளது.

காலை 9.30 மணிக்கு மேலும்,  பிற்பகல் 2.30-க்கு மேலும் தாமதமாக வரும் மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

ஆள் மாறாட்டத்தை தடுப்பதற்கு பயோமெட்ரிக் வருகை பதிவு மற்றும் புகைப்படம் எடுக்கும் பணிகள்  செய்யப்பட்டுள்ளது.

ஊனமுற்றோருக்காக தரை தளத்தில் தேர்வு எழுதும் வசதி செய்யப்பட்டுள்ளதாகவும் ஜிப்மர் இயக்குனர் சுபாஷ் சந்திர பரிஜா தெரிவித்துள்ளார்.