(பைல் படம்)

சென்னை:

நாளை திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என்று அரசு மற்றும் ஆசிரியர்களை கூட்டமைப்பான ஜாக்டோ, ஜியோ அறிவித்து உள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ – ஜியோ அமைப்பு நாளை சென்னை கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜாக்டோ – ஜியோ நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள் இதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.

இந்நிலையில் தங்களது போராட்டம் திட்டமிட்டபடி நாளை நடைபெறும் என ஜாக்டோ ஜியோ தெரிவித்துள்ளது. மேலும், ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் வீடுபுகுந்து கைது செய்வதற்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் காத்தவராயன் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், கோரிக்கைகளை வலியுறுத்தி திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என்று அவர் கூறியுள்ளார்.