சென்னை: தமிழ்நாட்டில் தீவிர வாக்காளர் திருத்தப்பணிகள் (SIR) நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும்  நிலையில், பூர்த்தி செய்யப்பட்ட எஸ்ஐஆர் படிவங்களை ஒப்படைக்க நாளை கடைசி நாள் என தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில்,  இதுவரை 6 கோடியே 36 லட்சம் வாக்காளர்களின் எஸ்ஐஆர் படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் எஸ்.ஐ.ஆர் படிவங்களை ஒப்படைக்க நாளை (டிசம்பர் 11) கடைசி நாள் என்று   தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

வாக்காளா் பட்டியலில் இந்தியா் அல்லாதவா்கள் சோ்க்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்து நீக்கவும், இறந்த வாக்காளா்கள் பெயா்கள் மற்றும் ஒரு நபா் பல இடங்களில் வாக்காளராகப் பதிவு செய்திருப்பதைக் கண்டறிந்து நீக்கவும், வெளிநாடுகளை சேர்ந்த அகதிகள், போலி ஆவனங்கள் மூலம் வாக்காளர் அட்டை பெற்று வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதை கண்டறிந்து நீக்கவும்,  வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணியை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே முதல்கட்டமாக பீகாரில் நடத்தப்பட்ட நிலையில், இரண்டாம் கட்டமாக அடுத்த ஆண்டு (2026) தேர்தல் நடைபெற உள்ள  தமிழகம், புதுச்சேரி, மேற்குவங்கம், கேரளா  உள்பட 12 மாநிலங்களில் தோ்தல் ஆணையம் எஸ்ஐஆர் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த பணிகள்  கடந்த நவ. 4-ஆம் தேதி முதல் தொடங்கிய  நிலையில், அரசு ஊழியர்கள் வீடுவீடாக சென்று எஸ்ஐஆர் படிவங்களை வழங்கி, அதை நிரம்பி தரும்படி கூறி வாங்கினர். மேலும், பொதுமக்கள் வசதிக்காக வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் அமைத்து,  வாக்காளர் விவரங்கள் கோரப்பட்டது. இதையடுத்து, நிரப்பப்பட்ட எஸ்ஐஆர் படிவங்கள் வாங்கி, அதை இணையதளத்தில் பதிவேற்றும் பணி நடைபெற்று வருகிறது.

இடையில், மழை காரணமாக பணிகளில் இடையூறு ஏற்பட்டதால்,  தேர்தல் பணி ஊழியர்கள்,   அரசியல் கட்சிகளின் கோரிக்கையை ஏற்று, எஸ்ஐஆர் படிவம் இணையத்தில் ஏற்றுவதற்கான கால அவகாசம்   டிச. 11 வரை நீட்டிப்பு செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.  டிசம்பர் 16ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

இந்த நிலையில்,  எஸ்ஐஆர் படிவம் இணையத்தில் ஏற்றுவதற்கான கால அவகாசம்  நாளையுடன் முடிவடைவதாகவும், இதுவரை படிவங்களை நிரம்பி தராதவர்கள் உடனே சம்பந்தப்பட்ட நபர் அல்லது வாக்குச்சாடியில் கொண்டு கொடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

[youtube-feed feed=1]