சென்னை: நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், நாளை கங்கா ஸ்நானம், புத்தாடை, பட்டாசு வெடிக்க உகந்த நேரங்கள் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் இந்தாண்டு தீபாவளி அக்டோபர் 20-ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி இந்து மதத்தின் மிகப்பெரிய பண்டிகையாக கருதப்படுகிறது. தீபாவளி ஐப்பசி மாதத்தில் கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்றால் புத்தாடைகளும், பலகாரமும், பட்டாசுகள் தான் நினைவுக்கு வரும். காற்று மாசு காரணமாக தீபாவளிக்கு உச்சநீதிமன்றம் நேரக் கட்டுப்பாடு விதித்துள்ளது. அந்த நேரத்தில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

நமது மக்களிடையே தீபாவளி என்றாலே புத்தாடை, பட்டாசு, வானவேடிக்கை, இனிப்புகள் என கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாளகே மக்கள் வணிக நிறுவனங்களுக்கு படையெடுத்து தங்களுக்கு தேவையானவற்றை வாங்கி மகிழ்கின்றனர். இநத் நாளை 2025 அக்டோபர் 20 திங்கட்கிழமை அன்று இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது.
தீபாவளி தென்மாவட்டங்களில் ஒரு நாள் அல்லது இரண்டு நாளில் மட்டுமே கொண்டாடப்படுகிறது. ஆனால், வடமாநிலங்களில் ஐந்து நாட்களும் இந்தியாவில் பல இடங்களில் வெவ்வேறு சமூகங்களில் தீபாவளி நோன்பு கொண்டாடி மகிழ்கின்றனர்.
தீபாவளி அன்று கங்கா ஸ்நானம் (எண்ணெய் தேய்த்து தலைக்கு குளிப்பது – Oil Bath) செய்வதுடன், புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து மகிழ்வதுடன், இனிப்புகள் செய்தும், அதை நண்பர்கள் உறவினர்களுக்கு வழங்கியும் மகிழ்கின்றனர்.
நாளை எண்ணெய் தேய்த்து குளிக்க உகந்த நேரம் என்ன?
தீபாவளி குளியல் என்பது கங்கை நதியில் குளிப்பதற்கு ஒப்பாக கருதப்படுவதால் இது கங்காஸ்நானம் என்று அழைக்கப்படுகிறது துலாம் மாதம் என்று அழைக்கப்படும் ஐப்பசி மாதத்தில், புண்ணிய நதிகளில் நீராடுவது பாவங்களை போக்கும் என்பது ஐதீகம்.
இந்தியாவின் புண்ணிய நதியான, எல்லா பாவங்களையும் போக்கும் தன்மை கொண்டது கங்கை நதியே, கங்கா, துலாம் மாதத்தில் காவேரி நதியில் நீராடுவார் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. அதனால் இந்துக்கள் ஒவ்வொருவரும் தீபாவளி அன்றை எண்ணை தேய்த்து தலைக்கு குளிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
அதன்படி தீபாவளி நாளான திங்கள்கிழமை (அக்.20) அதிகாலை 3 மணிக்கு மேல் 6 மணிக்குள் கங்கா ஸ்நானம் (நல்லெண்ணெய் குளியல்) செய்ய உகந்த நேரம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து புத்தாடை அணிந்து வீட்டில் விளக்கேற்றி வெடிகளை வெடிக்க தொடங்கலாம்.
தீபாவளி மற்றும் குபேர பூஜை செய்ய உகந்த நேரமாக, விசுவாவசு வருடம் ஐப்பசி மாதம் 3-ஆம் நாள் திங்கள்கிழமை மாலை 3.45 மணிக்கு மேல் இரவு 7 மணிக்குள் தீபாவளி பூஜையும், குபேர பூஜையும் செய்வது உத்தமம்.
மறுநாள் செவ்வாய்க்கிழமை (21.10.2025) அன்று கேதார கௌரி விரதம் கடைப்பிடிக்கலாம்.
இந்தாண்டு தீபாவளி பண்டிகை தினமான 20.10.2025 அன்று மாலை 3.45-க்கு தொடங்கி மறுநாள் (21.10.2025) மாலை 5.48 வரை அமாவாசை திதி உள்ளது. கேதார கௌரி விரதம் கடைப்பிடிப்பவர்கள் ராகு காலம், எமகண்டம் தவிர்த்து வீட்டில் கலசம் வைத்தோ அல்லது கோயிலுக்கு சென்றோ பூஜைகளைச் செய்துகொள்ளலாம்.
பட்டாசு வெடிக்கும் நேரம்: