சென்னை: அண்ணா நினைவு நாளையொட்டி கோயில்களில் நாளை சிறப்பு வழிபாடு, பொது விருந்து நடத்த அனுமதியில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளன்று, அனைத்து மக்களும் சமம் என்ற அடிப்படையில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் சமபந்தி விருந்து வருடந்தோறும் கோவில்களில் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், இந்த ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளதால், கோவில்களில் சமபந்தி விருந்து, சிறப்பு வழிபாடுகளை நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், , அண்ணா நினைவு நாளையொட்டி கோயில்களில் நாளை சிறப்பு வழிபாடு, பொது விருந்து நடத்த அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டு உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்த விதிகள் அமலில் இருப்பதால் பொது விருந்து நடத்த அனுமதியில்லை என தமிழக அரசு தெரிவித்தது.