சென்னை,
மிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் (டிஎன்பிஎஸ்சி) 5 ஆயிரத்து 451 காலிப்பணி இடங்களுக் கான  GroupIV தேர்வு நாளை மாநிலம் முழுவதும் உள்ள 301 தாலுகா மையங்களில் நடக்கிறது.
இத்தேர்விற்காக விண்ணப்பித்துள்ள 15 லட்சத்திற்கும் கூடுதலான தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு தேர்வுக்கூட நுழைவு சீட்டு தேர்வாணைய இணையதளமான www.tnpsc ல் தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளும்படி ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
tnps3
தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு தேர்வர்கள் தங்களின் விண்ணப்ப எண், பயனாளர் குறியீடு மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை இணையதள பக்கத்தில் உள்ளீடு செய்து, பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
இதுகுறித்து தேர்வாணையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
தேர்வுக் கூடத்துக்குள் நுழையும்போதும், அறைக் கண்காணிப்பாளர் கேட்கும்போதும் தேர்வர்கள் அனுமதிச் சீட்டை காண்பிக்க வேண்டும். உடன் வரும் பெற்றோர் உள்ளிட்டோருக்கு அனுமதி கிடையாது.
செல்லிடப்பேசி, கால்குலேட்டர் உள்ளிட்ட எந்தவித மின்னணு சாதனங்களையும் தேர்வுக் கூடத்துக்குள் எடுத்துவரவோ, வைத்திருக்கவோ கண்டிப்பாக அனுமதி கிடையாது. மீறி வைத்திருந்தால் கடுமையான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும்.
தேர்வு மையத்தை மாற்றவோ, தேர்வுக்கூட நுழைவுச்சீட்டில் அச்சிடப்பட்டுள்ள விருப்பப் பாடத்தை மாற்றி எழுதவோ கண்டிப்பாக அனுமதியில்லை. தேர்வாணைய அறிவுரைகளை தேர்வுக்கு வரும் முன் கவனமாகப் படித்துவிட்டு வர வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.
இந்த தேர்வு மூலம்  இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், பில்கலெக்டர், வரைவாளர் , நில அளவர் போன்ற பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
அரசு வேலைகளுக்கு தகுதியான ஆட்கள் தேர்வு செய்யப்படுவதற்காக, தமிழக அரசால் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பே தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.  இதன்மூலம் தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்க ளுக்கு தேவையான பணியாளர்களை எழுத்து தேர்வு மூலமும், நேர்முக தேர்வு மூலமும் நியமனம் செய்து வருகிறார்கள்.
tnpsc1
அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவும், வெவ்வேறு வகையான பணியிடங்களுக்கு தகுந்தாற்போல்  அதற்கு தேவையானவர்களை  தேர்வு செய்ய தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அதற்கான தகுதி தேர்வை, வேலைக்கு தகுந்தார்போர் குரூப்-1, குரூப்-2, குரூப்-3, குரூப்-4 என தனித்தனியாக ஆண்டு தோறும் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்த சந்தேகங்களை 044-25332855, 044-25332833 மற்றும் கட்டணமில்லாத் தொலைபேசி எண் 1800 425 1002-ல் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று தேர்வாணையம் அறிவித்துள்ளது.