சென்னை
சென்னையில் முதல்வர் மு க ஸ்டாலின் நாளை மலர் கண்காட்சியை தொடங்கி வைக்க உள்ளார்.
ஓவ்வொரு ஆண்டும் ஊட்டியில் மலர் கண்காட்சி நடைபெற்று வரும் நிலையில், சென்னையில் உள்ள செம்மொழி பூங்காவிலும் மலர் கண்காட்சி நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி ஜனவரி 2ம் தேதி தொடங்கும் இந்த மலர் கண்காட்சியில் பூத்துக் குலுங்கும் மலர்களுடன் பல விதமான மலர்கள் வைக்கப்படும்.
கடந்த ஆண்டு செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி நடைபெற்ற போது மக்கள் கொடுத்த உற்சாக வரவேற்பு காரணமாக தமிழக தோட்டக்கலைத் துறை இந்த ஆண்டும் மலர் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது இந்த மலர் கண்காட்சி ஜனவரி 2-ம் தேதி முதல் ஜனவரி 18-ம் தேதி வரை நடைபெறுகிறது.
தின்சரி காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை பார்வையிடலாம். இதற்கு பெரியவர்களுக்கு ரூ.150 மற்றும் சிறியவர்களுக்கு ரூ.75 கட்டணம் நிர்ணயம் செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கண்காட்சியில் சுமார் 800 வகையான விதவிதமான செடிகள் வளர்க்கப்பட்டு பராமரிக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த 4 ஆவது மலர் கண்காட்சியை நாளை\ (ஜன. 2) செம்மொழிப் பூங்காவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இக்கண்கட்சியில் 30 லட்சம் மலர்த் தொட்டிகளுடன், மலர்கள் கொண்டு அமைக்கப்பட்டுள்ள பல உருவங்களும் இடம்பெற உள்ளன.