சென்னை

நாளை யில் சென்னையில் சில பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக மின் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

”சென்னையில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.

ஆர்.ஏ.புரம் :

ஆர்.ஏ.புரம், எம்.ஆர்.சி.நகர் பகுதி, போர்ஷோர் எஸ்டேட்டின் ஒரு பகுதி, காந்தி நகரின் ஒரு பகுதி, பிஆர்ஓ குவார்ட்டர்ஸ், ஆர்.கே.மடம், ஆர்.கே.நகர், ராணி மெய்யம்மை டவர், சத்திய தேவ் அவென்யூ, ட்ரூ வேல்யூ ஹோம்ஸ், ராஜா தெரு, ராபர்ட்சன் லேன், ராஜா கிராமணி கார்டன், கேவிபி கார்டன், அப்பா கிராமணி தெரு, வேலாயுதராஜா தெரு, டிபி ஸ்கீம் ரோடு, ராஜா முத்தையா புரம், குட்டிகிராமணி தெரு. காமராஜ சாலை, கஸ்தூரி அவென்யூ, கற்பகம் அவென்யூ, வசந்த் அவென்யூ, சவுத் அவென்யூ, சண்முகபுரம், சாந்தோம் நெடுஞ்சாலை, சத்தியா நகர், அறிஞர் அண்ணாநகர், அன்னை தெரிசா நகர், பெருமாள் கோயில் தெரு, தெற்கு கால்வாய் வங்கி சாலை.

மணலி:

எம்.ஜி.ஆர். நகர், விமலாபுரம், சீனிவாசன் தெரு, ராதகிருஷ்ணன் தெரு, பூங்காவணம் தெரு. காமராஜர் சாலை, பாடசாலை, சின்னசேக்காடு, பார்த்தசாரதி தெரு, பல்ஜி பாளையம், சத்தியமூர்த்தி நகர், டி.கே.பி. நகர், வி.பி. நகர், ராமசாமி நகர், கார்கில் நகர், ராஜாஜி நகர், ஜெயலலிதா நகர், வெற்றி விநாயகர் நகர், தேவராஜன் தெரு, பெருமாள் கோவில் தெரு, பெருமாள் கோவில் தெரு, பழைய எம்.ஜி.ஆர். நகர், பெரியார் நகர், பாரதியார் நகர், கிராம தெரு, எடபாளையம், ஒத்தவாடைத் தெரு, ஜெயபால் நகர், பார்வதி நகர், தேவிகருமாரியம்மன் நகர், கணபதி நகர், பெருமாள் கோவில் தெரு, மூலச்சத்திரம் மெயின் ரோடு, மணலி பகுதி.

பல்லாவரம்:

ஈஸ்வரி நகர், சக்தி நகர், கணபதி நகர், சரோஜினி நகர், தர்கா சாலை மற்றும் பல்லாவரம் கிழக்கு பகுதிகள்.

என்று அறிவிக்கப்பட்டுள்ளது.