சென்னை: நாளை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் 17ந்தேதி (நாளை மறுதினம்) தொடங்குகிறது. இந்த கூட்டத்தில் புதிய மசோதாக்கள் மற்றும் பல திட்டங்கள், அறிக்கைகள் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில் நாளை அதிமுக எம்எல்ஏ கூட்டம் நடைபெறும் என எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்படி பழனிச்சாமி அறிவித்து உள்ளார்.
அதன்படி, நாளை மாலை 5மணிக்கு ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. சட்டப்பேரவையில் எழுப்ப வேண்டிய பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.