
கடந்த மார்ச் மாதம் நடிகர் டாம் ஹாங்க்ஸ் மற்றும் அவரது மனைவி ரீடா வில்சன் இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
டாம் ஹாங்க்ஸ் கொரோன வைரஸால் பாதிப்பட்டிருந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.
பின்னர் கொரோன சிகிச்சை முடிந்ததும் டாம் ஹாங்க்ஸ் மற்றும் ரீடா இருவரும் குணமடைந்து வீடு திரும்பினர். பின்னர் அவர்களே முன்வந்து வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சைக்காக தங்கள் இரத்தத்தை கொடுத்தனர்.
இந்நிலையில் தற்போது கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணிகளுக்காக இரண்டாவது முறையாக மீண்டும் ரத்தம் கொடுக்க முன்வந்துள்ளதாக டாம் ஹாங்க்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel