மதுரை: தமிழகத்தில் மதுரை முதல் குமரி வரையிலான சுங்கச்சாவடிகளில் இன்றுமுதல் டோல் கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுதற்கு வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பல டோல்களில் பயணிகள் டோல் நிர்வாகிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள அனைத்துச் சுங்கச்சாவடிகளிலும்  நேரடியாகப் பணம் செலுத்துவதை தவிர்ப்பதற்காக பாஸ்டேக் முறையை அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், எந்தவித முன்னறிவிப்பு இன்று இன்று திடீரென மதுரை முதல் குமரி மாவட்டம் வரையிலான டோல் கேட்களில் டோல் கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது.

மதுரை முதல் கன்னியாகுமரி வரை உள்ள மதுரை – கப்பலூர், விருதுநகர் – சாத்தூர், திருநெல்வேலி – கயத்தாறு, நாகர்கோவில் – நாங்குநேரி ஆகிய நான்கு சுங்க சாவடிகளில் 5 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது.  இது வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பல சுங்கச்சாவடிகளில் பயணிகளுக்கும் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதங்கள் நடைபெற்று வருகிறது.

கார், ஜீப், வேன் உள்ளிட்ட இலகுரக வாகனங்களுக்கு 80 ரூபாயாக இருந்த கட்டணம் 5 ரூபாய் உயர்த்தப்பட்டு 85 ரூபாயாக உள்ளது.

இரண்டு அச்சு கனரக வாகனம் மற்றும் பேருந்திற்கு 270 ரூபாய் இருந்த கட்டணம் 20 ரூபாய் உயர்த்தப்பட்டு 290 ரூபாயாக உள்ளது.

மூன்று அச்சு கனரக வாகனங்களுக்கு 295 ரூபாயாக இருந்த கட்டணம் 20 ரூபாய் உயர்த்தப்பட்டு 315 ரூபாயாக உள்ளது.

 மூன்று முதல் ஆறு அச்சு கொண்ட கனரக வானங்களுக்கு 425 ரூபாயாக இருந்த கட்டணம் 25 ரூபாய் உயர்த்தப்பட்டு 450 ரூபாயாக உள்ளது.

7க்கு மேல் அச்சு கொண்ட கனரக வாகனங்களுக்கு 520 ரூபாயாக இருந்த கட்டணம் 30 ரூபாய் உயர்த்தப்பட்டு 550 ரூபாயாக உள்ளது.