டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீராங்கனை கமல்பிரீத் கவுர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
32 வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளில் உலக நாடுகளைச் சேர்ந்த 11,000 மேற்பட்ட வீராங்கனைகள், வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இன்று நடைபெற்ற ஒலிம்பிக் வட்டு எறிதல் போட்டி மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனை கமல்பிரீத் கவுர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். தகுதிச் சுற்றில் அதிகபட்சமாக 64 மீட்டர் தூரத்திற்கு வட்டு எறிந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார் கமல்பிரீத் கவுர்.
ஆகஸ்ட் 2-ல் நடைபெறும் மகளிருக்கான வட்டு எறிதல் இறுதிப்போட்டியில் பதக்கம் கிடைக்குமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.