டெல்லி: ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று வருபவர்களுக்கு ரூ.3 கோடி பரிசு வழங்கப்படும் என ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளில் இந்திய அணி ஒரே ஒரு வெண்கலப்பதக்கம் மட்டுமே பெற்றுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வீரர்கள் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்து வெளியேறி வருகின்றனர். டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ரயில்வே சார்பில் 25 விளையாட்டு வீரர்கள் 5 பயிற்சியாளர்கள் மற்றும் ஒரு பிசியோதெரபிஸ்ட் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிலையில் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொண்டுள்ள வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில், பதக்கம் வெல்லும் இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு சிறப்பு சலுகைகளை ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி,

ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்வோருக்கு 3 கோடி ரூபாயும், வெள்ளிப் பதக்கம் வெல்வோருக்கு 2 கோடி ரூபாயும், வெண்கலப் பதக்கம் வெல்வோருக்கு ஒரு கோடி ரூபாயும் வழங்கப்படும் என்றும்ட, தடகள போட்டிகளில் பதக்கம் வெல்லும் வீரர்களின் பயிற்சியாளர்களுக்கும் பரிசுத்தொகை வழங்கப்படும் என்று ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.