டோக்கியோ: ஜப்பானில் இன்று நடைபெற்ற மல்யுத்த போட்டிகளில், ஒலிம்பிக் ஆடவர் மல்யுத்த்தில்  பஜ்ரங் புனியா காலிறுதிக்கு முன்னேற்றம் அடைந்தார். மகளில் மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனை சீமா பிஸ்லா தோல்வி அடைந்து வெளியேறினார்.

ஒலிம்பிக்கின் 15ஆவது நாள் போட்டியான இன்று பல போட்டிகளில் இந்திய அணியினிர் பங்கேற்று ஆடி வருகின்றனர். மகளிர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தனதர்.  ஆடவர் மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். மகளிர் மல்யுத்த 50 கிலோ எடைப் பிரிவில் இந்திய மல்யுத்த வீராங்கனை சீமா பிஸ்லா தோல்வியடைந்தார்.

ஆடவர் மல்யுத்தம் 65 கிலோ எடைப்பிரிவில், இந்திய வீரரான பஜ்ரங் புனியா, கிர்கிஸ்தான் நாட்டின் அக்மதாலீவ் உடன் மோதினார். தொடக்கம் முதலே சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்திய புனியா, இறுதியில் அக்மதாலீவை வீழ்த்தினார். தற்போது அவர் காலிறுதிக்கு முன்னேறி உள்ளார்.

மகளிர் மல்யுத்த 50 கிலோ எடைப் பிரிவில் இந்திய மல்யுத்த வீராங்கனை சீமா பிஸ்லா தோல்வியடைந்தார். இவர் துனிசியா நாட்டின் சார்ரா ஹம்டிக்கு எதிராக ப்ரீ-ஸ்டைல் ரவுண்டில் களமிறங்கினார். ஆரம்பம் முதலே சார்ரா முன்னிலை பெற்றதால், சீமா பிஸ்லாவிற்கு பின்னடைவு ஏற்பட்டது. இறுதியில் 1-3 என்ற கணக்கில் சீமா பிஸ்லா தோல்வியடைந்தார்.