டோக்கியோ: ஜப்பானில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில், இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்ற பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, ஹெவிவெயிட் குத்துச்சண்டை வீரர் சதீஷ்குமார், ஹாக்கி அணி ஆகியவை கால் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
ஒலிம்பிக்கில் தங்கம் பெறுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மோரி கோம் உள்படபல வீரர்கள் தோல்வியை சந்தித்துள்ளனர். இந்த நிலையில், பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஆக்ரோஷமான ஆட்டத்தால், முன்னேறி வருகிறார்.
இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவரான பி.வி.சிந்து, டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில், காலிறுதிக்கு முந்தைய சுற்றில், டென்மார்க் வீராங்கனை மியா பிலிச்ஃபெல்ட்டை (Mia Blichfeldt), , 21-க்கு 15, 21-க்கு 13 என்ற நேர் செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
சூப்பர் ஹெவி வெயிட் எடைப்பிரிவில் இந்திய வீரர் சதீஷ் குமார் காலிறுதிக்கு முன்னேற்றி உள்ளார். குத்துச்சண்டை சூப்பர் ஹெவி வெயிட் (91 கிலோ எடைக்கு மேல் உள்ள வீரர்கள்) பிரிவு ரவுண்ட் ஆஃப் 16 சுற்று போட்டிகள் இன்று நடைபெற்றன. ஒரு போட்டியில் இந்தியாவின் சதீஷ் குமார் ஜமைக்காவின் ரிகார்டோ பிரௌன்-ஐ எதிர்கொண்டார். இதில் 4:1 என்ற அடிப்படையில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். சதீஷ் குமார் 30-27, 30-27, 28-29, 30-27, 30-26. முதல் ரவுண்டில் ஐந்து நடுவர்களிடமும் தலா 10 புள்ளிகள் பெற்றார். 2-வது சுற்று மற்றும் 3-வது சுற்றில் 3-வது நடுவர் தலா 9 புள்ளிகள் வழங்கினார்.
இதையடுத்து, சதிஸ்குமார் ஆகஸ்ட் 1-ந்தேதி நடைபெறும் காலிறுதியில் உஸ்பெகிஸ்தான் வீரர் பகோதிர் ஜாலோலோவ்-ஐ எதிர்கொள்கிறார்.
ஆண்கள் ஹாக்கி போட்டியில் இந்திய அணி, அர்ஜெண்டினாவை 3-க்கு 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, காலிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது. இந்திய வீரர்கள், வருண், ஹர்மன்பிரீத், விவேக் சாகர் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். இந்திய அணிக்காக வருண்குமார் 43-வது நிமிடத்திலும், விவேக் சாகர் பிரசாத், 58-வது நிமிடத்திலும், ஹர்மன் பிளீசிங் 59-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.
இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்தை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. 2-வது போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் 1-7 என்ற கோல் கணக்கில் மோசமாக தோற்றது. 3-வது ஆட்டத்தில் ஸ்பெயினை 3-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. இதில் இந்தியா 3-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
இந்திய அணிக்காக வருண்குமார் 43-வது நிமிடத்திலும், விவேக் சாகர் பிரசாத், 58-வது நிமிடத்திலும், ஹர்மன் பிளீசிங் 59-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். முதல் பகுதி ஆட்டத்தில் கோல் எதுவும் விழவில்லை. ஆட்டத்தின் கடைசி 2 நிமிடங்களில் இந்தியா 2- கோல் அடித்து முத்திரை பதித்தது.
அர்ஜென்டினா அணிக்காக கேசிலா 48-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இந்த பதில் கோலால் 1-1 என்ற சமநிலை நீண்ட நேரமாக இருந்தது.கடைசி நிமிட கோல்களால்தான் வெற்றி கிடைத்தது.
இந்திய அணி பெற்ற 3-வது வெற்றியாகும். இதன் மூலம் கால் இறுதிக்கு தகுதி பெற்றது. 4 ஆட்டத்தில் 3 வெற்றி, 1 தோல்வியுடன் 9 புள்ளிகள் பெற்றுள்ளது.
இந்த பிரிவில் ஆஸ்திரேலியாவும் 4 வெற்றிகளுடன் 12 புள்ளிகள் பெற்று கால் இறுதிக்கு தகுதி பெற்றது. இந்திய அணி கடைசி இறுதி ஆட்டத்தில் ஜப்பானை நாளை எதிர்கொள்கிறது.
வில்வித்தை ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் அதானு தாஸ், இரண்டு எலிமினேஷன் சுற்றுகளில் சீன தைபே வீரரையும், தென்கொரிய வீரரையும் வீழ்த்தி, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்