ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு சோதனை…. ஒருவர் மட்டுமே படுத்து புரள கூடிய கட்டில்

Must read

 

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீர்களின் தங்கும் அறையில் ஒருவர் மட்டுமே படுக்கக்கூடிய வகையில் கட்டில் அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் நடந்த ஒலிம்பிக் போட்டிகளின் போது அமைக்கப்பட்ட வீரர்கள் தங்குமிடங்களில் வீரர்களுக்கு தாராளம் காட்டப்பட்டதோடு, எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வீரர்களுக்கு ஆணுறைகளும் தாராளமாக ஆங்காங்கே கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மேலும், வீரர்களுக்கும் எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் இருந்தது, தற்போது கொரோனா பரவல் காரணமாக வீரர்களின் உடல்நிலை குறித்து அச்சம் கொண்டுள்ள ஒலிம்பிக் கமிட்டி, வீரர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

வீரர்கள் போட்டிகள் அனைத்தும் முடிந்து அவர்கள் ஊருக்கு கிளம்பும் நேரத்தில் தான் அவர்களுக்கு ஆணுறைகள் வழங்கப்படும் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வுக்காக வழங்கப்படும் இதனை அவர்கள் நாடுகளுக்கு சென்றதும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

இருந்தபோதும், சமூக இடைவெளி பற்றி கவலைப்படாத வீரர்களை என்ன செய்வது என்று யோசித்த நிர்வாகிகள், அவர்கள் தங்கும் அறைகளில் உள்ள படுக்கைகளை ஒருவருக்கு மேல் படுக்கமுடியாமல் பாரம் தாங்காத கார்ட்போர்ட் எனும் கனமான அட்டையில் செய்துள்ளார்கள்.

இதனால், போட்டி என்று வந்துவிட்டால் மைதானத்தில் குஸ்தியில் இறங்கும் வீரர்கள் தங்கள் தனியறையில் எந்தவித குஸ்தியிலும் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமெரிக்க ஓட்டப்பந்தய வீரர் பவுல் செலிமோஸ் “தான் தரையில் படுக்க பழகிக்கொள்ளப் போவதாகப் பதிவிட்டுள்ளார்”.

More articles

Latest article