சென்னை: டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு, வேறுவேறு விளையாட்டுப் பிரிவுகளில் மொத்தம் 7 தமிழர்கள் தகுதிபெற்றுள்ளனர்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள், வரும் ஜூலை & ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறவுள்ளது.

இதில், பாய்மரப் படகுப் போட்டியில் பங்கேற்க, தமிழ்நாட்டின் நேத்ரா, விஷ்ணு, கணபதி மற்றும் வருண் ஆகியோர் தகுதிபெற்றுள்ளனர். இதில், 22 வயது நேத்ரா என்ற வீராங்கனை, இந்தியா சார்பாக, ஒலிம்பிக் பாய்மர படகு போட்டிக்கு தகுதிபெற்ற முதல் வீராங்கனை என்ற சிறப்பை பெற்றார்.

இதுதவிர, வாள் சண்டைப் பிரிவில் பவானி, டேபிள் டென்னிஸ் பிரிவில் அஜந்தா சரத்கமல், சத்தியன் ஆகியோரும் தகுபெற்றனர். இதன்மூலம், மொத்தம் 7 தமிழர்கள், ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளனர்.

 

[youtube-feed feed=1]