டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக்கில் ஹாக்கி போட்டியில்  நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்று அடுத்தச் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி பெறும் முதல் வெற்றி இதுவாகும். லீக் சுற்றில் இந்திய அணி நாளை ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள உள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஹாக்கி போட்டிகளின் குரூப் சுற்றுகள் நடைபெற்று வருகிறது. இந்திய நேரப்படி அதிகாலை 6.30 மணிக்கு லீக் போட்டி தொடங்கியது. இதில்,  குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா அணி கேப்டன் மன்பிரீத் சிங் தலைமையில் களமிறங்கியது.

இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையே கடுமையான போட்டி  இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், .போட்டி தொடங்கிய 6 வது நிமிடத்தில் நியூசிலாந்து வீரர் ரசல் முதல் கோல் அடித்தார். இதனால் ஆட்டம் மேலும் விறுவிறுப்படைந்தது. இதையடுத்த, இந்திய அணி கடுமையாக அடியது.  ஆட்டத்தின் 10-வது நிமிடத்தில் இந்திய அணி வீரர் ருபிந்தர் பால் சிங் முதல் கோல் அடித்தார். இதனால், ஆட்டத்தின் முதல் பகுதியில் 1-1 என இரு அணிகளும் சமநிலையில் இருந்தன.

தொடர்ந்து,  ஆட்டத்தின் 2-வது பகுதி தொடங்கியதுமே இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முயற்சித்து கடுமையா ஆடினர். ஆனால், நியூசிலாந்து அணியினரை நெருங்க விடாமல் ஆடிய இந்திய அணியினிர், 26 வது நிமிடத்தில் இந்திய வீரர் ஹர்மன்பிரீத் சிங் கோல் 2வது  கோலை அடித்தார்.

இதனைதொடர்ந்து ஆட்டத்தின் 3-வது பகுதி விறுவிறுப்பாக தொடங்கியது. இரு அணிகளுமே கோல் போடும் முயற்ச்சியில் கடுமையா ஆடினர். ஆனால்,  ஆட்டத்தின் 33 வது நிமிடத்தில் இந்திய வீரர் ஹர்மன்பிரீத் சிங் மீண்டும் கோல் அடித்தார். இதனால், இந்திய அணியின் கோல் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்தது. தொடர்ந்து  43-வது நிமிடத்தில் நியூசிலாந்து வீரர் ஜோனஸ் ஒரு கோல் அடித்தார்.

இதனால், நியூசிலாந்து அணியின் கோல் எண்ணிக்கை 2 ஆகவும், இந்திய அணியின் கோல் எண்ணிக்கை 3 ஆகவும் தொடர்ந்தது. இதனை தொடர்ந்து ஆட்டத்தின் இறுதி பகுதியான 4-வது பகுதியில், இரு அணிகளுமே ஒருவரை ஒருவர் கோல் அடிப்பதை தவிர்த்த தடுப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆட்டத்தின் நேரம் முடிவடைந்ததார்ல, இந்திய அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.  நியூசிலாந்தை 2-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய ஹாக்கி அணி ஒலிம்பிக்கின் முதல் வெற்றியை பதிவு செய்தது.