டோக்கியோ: துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் சீன வீராங்கனை சாதனை படைத்து,  முதல் தங்கப்பதக்கத்தை சீனா கைப்பற்றி உள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இன்று காலை முதல் துப்பாக்கி சுடுதல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 10 மீ ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில்  இந்திய வீரர்களின் இளவேனில் வாலறிவன், உலக சாதனை வைத்துள்ள அபூர்வி சந்தேலா ஆகியோர் பின்னடைவை சந்தித்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியாத நிலை ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து நடைபெற்ற வந்த போட்டிகளில் தகுதி பெற்ற சீனா வீராங்கனை யாங் கிவான்  இறுதிச்சுற்றில் 251.8 புள்ளிகள் பெற்று, வெற்றிப்பெற்று முதல் தங்கப்பதக்கத்தை கைப்ப‘ற்றி சாதனை படைத்தள்ளார். இது புதிய ஒலிம்பிக் சாதனையாக போற்றப்படுகிறது.

2வது இடத்தை  ரஷ்ய வீராங்கனை அனஸ்தேஷியா கலாஷினா பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். 3வது இடத்தை சுவிட்சர்லாந்தின் நீனா கிரிஸ்டன் பிடித்து வெண்கலம் வென்றார்.