டோக்கியோ:
டோக்கியோ ஒலிம்பிக் தொடரை ரத்து செய்யப்படாது என்றும் டோக்கியோ 2020 தலைவர் யோஷிரோ மோரி உறுதி செய்துள்ளார்.

உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 24ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 9ம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கொரோனா வைரஸ் 192 நாடுகளுக்குப் பரவி, உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் 3, 36, 075 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 14,613 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 97, 636 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் டோக்கியோவில், ஜூலை மாத இறுதியில் திட்டமிட்டபடி ஒலிம்பிக் தொடர் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில் டோக்கியோ 2020 தலைவர் யோஷிரோ மோரி தெரிவிக்கயில், ஒலிம்பிக் போட்டிகள் திட்டமிட்டபடி நடக்கும் என்றும், எந்த காரணத்திற்காகவும் ரத்து செய்யப்படாது என்றும் உறுதியாக தெரிவித்தார்.

The Olympic Rings adorn an event square which opens at Tokyo’s Nihonbashi to mark just one year to the start of the 2020 Tokyo Olympics and Paralympics.
Tokyo Olympic Games One Year to Go, Japan – 24 Jul 2019
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த மோரி, ஒலிம்பிக் போட்டிகளை எப்படி சிறப்பாக நடத்துவது என்பது குறித்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உடன் ஆலோசிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
[youtube-feed feed=1]