சென்னை:
ஆகஸ்டு மாத ரேசன் பொருட்களுக்கு 1, 3, 4 தேதிகளில் வீடு வீடாக டோக்கன் விநியோகம் செய்யப்படும் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது. உணவுப்பொருள் வழங்கத்துறை ஊழியர்கள்,
இந்த தேதிகளில் வீடு தேடி சென்று டோக்கன் தர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. பின்னர், நவம்பர் மாதம் வரை இலவச ரேசன் பொருட்கள் வழங்கப்படும் என தமிழகஅரசு அறிவித்திருந்தது. ஆனால் தற்போது இனிமேல் இலவச ரேசன் பொருட்கள் இல்லை என்று அறிவித்து விட்டது.

இந்த நிலையில் ஆகஸ்டு மாதத்திற்கான இலவச ரேசன் பொருட்கள் பெற 1, 3, 4 தேதிகளில் வீடு வீடாக டோக்கன் வழங்கப்படும் என்றும்,
ஆகஸ்ட் 5ந்தேதி முதல் ரேசன் அட்டைதாரர்களுக்கு பொருட்களை முறையாக விநியோகம் செய்ய வேண்டும். நாள்தோறும் 225 குடும்ப அட்டைகளுக்கு மிகாமல் பொருட்களை வழங்க ரேசன் ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 5ந்தேதி முதல் ரேசன் அட்டைதாரர்களுக்கு பொருட்களை முறையாக விநியோகம் செய்ய வேண்டும். நாள்தோறும் 225 குடும்ப அட்டைகளுக்கு மிகாமல் பொருட்களை வழங்க ரேசன் ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், ரேசன் கடைகளுக்கு 7ந்தேதிக்கு பதில் மாற்று நாளில் பின்னர் விடுமுறை அறிவிக்கப்படும் ஆகஸ்டு 7ந்தேதி வெள்ளிக்கிழமையன்று ரேசன் கடைகள் செயல்படும் என உணவுப்பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது.
Patrikai.com official YouTube Channel