டெல்லி

ன்று 25 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரி மற்றும் விமானங்களுக்கு தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. எனவே  இந்த நிறுவனங்களின் சேவைகளும் பாதிக்கப்பட்டு வருகிறது..

இன்று மட்டும் 25-க்கும் மேற்பட்ட இந்திய விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இன்று இண்டிகோ நிறுவனத்தின் 7 விமானங்களுக்கும், விஸ்தாரா, ஸ்பைஸ்ஜெட் நிறுவனங்களின் தலா 7 விமானங்களுக்கும், ஏர் இந்தியா நிறுவனத்தின் 6 விமானங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்திய விமான நிறுவனங்களால் இயக்கப்படும்  275க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு கடந்த 12 நாட்களில் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இவற்றில் பெரும்பாலான மிரட்டல் செய்திகள் சமூக ஊடகங்கள் மூலம் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.