அமெரிக்காவின் சீயாட்டில் நகரத்தில் ஒரு வீட்டில் ஏற்பட்ட தீயில் ஒரு சிறு குழந்தை கருகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது அதன் அருகில் அதன் செல்ல நாயும் ஒரு கரடி பொம்மையும் கருகிய நிலையில் இருந்ததை பார்த்த தீயணைப்பு வீரர்கள் அந்த நாய் குழந்தையை காப்பாற்ற போராடிய முயற்சியில் தோற்று தானும் உயிரிழந்ததை கண்டுபிடித்திருக்கிறார்கள்.

todler

அவ்வீட்டில் இருந்த 3 குழந்தைகளும் இரண்டு பெரியவர்களும் தீப்பிடித்தவுடன் தப்பிவிட்டார்கள். ஆனால் அக்குழந்தை மட்டும் தீயில் மாட்டிக்கொண்டு பரிதாபமாக உயிரிழந்துவிட்டது. இதுகுறித்து காவல்துறை விசாரித்து வருகிறது.
சம்பவம் நடந்தகடந்த சனியன்று இரவு 11.30 மணியளவில் அவ்வீட்டின் ஜன்னல் வழியாக புகை வருவதையும் அலறல் சத்தத்தையும் கேட்ட உடனடியாக அண்டை வீட்டார் தீயணைப்பு துறைக்கு போன் செய்து அவர்கள் வருவதற்கு முன்னமே தாங்களே ஒன்றுகூடி தண்ணீர் பைப் வழியாக நீரை பாய்ச்சி தீயை அணைக்கப் போராடியிருந்திருக்கின்றனர்.
தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. தீப்பிடிப்பதை கண்டறியும் கருவியில் பேட்டரி தீர்ந்து போனதால் அது மாற்றப்படாமல் இருந்தது விபத்து மோசமாகி உயிரிழப்புகள் ஏற்பட காரணமாக அமைந்தது கண்டுபிடிக்கப்பட்ட்டுள்ளது.