சென்னை:

2018-19ம் ஆண்டுக்கான தமிழக பொது நிதிநிலை அறிக்கை இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.  துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார்.

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று காலை சபை தொடங்கியதும், காலை 10.30 மணி அளவில் துணை முதல்வர் ஓபிஎஸ் 2018-19ம் ஆண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய இருக்கிறார்.

தற்போதைய அரசியல் சூழ்நிலை, டிடிவி தினகரனின் அதிரடி அரசியல் கட்சி அறிவிப்பு, தகுதி நீக்க வழக்கு முடிவு மற்றும்  அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பொதுத்தேர்தல் இதையெல்லாம் கருத்தில்கொண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், காவிரி பிரச்சினை, விவசாயிகள் பிரச்சினை போன்றவற்றில மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்போக்குடன் நடந்துகொள்வதால், இந்த பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு சலுகைகள் வழங்கப்படுமா என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தற்போது தமிழக அரசு கடுமையான நிதி பற்றாக்குறையில் தள்ளாடி வரும் நிலையில், இன்று தாக்கல் செய்யப்போகும் பட்ஜெட் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.