வரலாற்றில் இன்று 18/10/16
அக்டோபர் 18 (October 18) கிரிகோரியன் ஆண்டின் 291 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 292 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 74 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1356 – சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற நிலநடுக்கம் அதன் பேசல் நகரை முற்றாக அழித்தது.
1860 – இரண்டாவது ஓப்பியம் போர் முடிவுக்கு வந்த்து.
1867 – ரஷ்யாவிடம் இருந்து அலாஸ்கா மாநிலத்தை ஐக்கிய அமெரிக்கா 7.2 மில்லியன் அமெரிக்க டாலர் விலை கொடுத்து வாங்கியது. இந்நாள் அலாஸ்கா நாள் எனக் கொண்டாடப்படுகிறது.
1898 – ஐக்கிய அமெரிக்கா புவெர்ட்டோ ரிக்கோவைக் கைப்பற்றியது.
1908 – பெல்ஜியம் கொங்கோவைக் கைப்பற்றியது.
1912 – முதலாம் பால்க்கான் போர் ஆரம்பமாகியது.
1922 – பிபிசி வானொலி ஆரம்பிக்கப்பட்டது.
1929 – கனடாவில் பெண்களும் மனிதர்கள் என சட்டபூர்வமாக எழுதப்பட்டது.
1944 – இரண்டாம் உலகப் போர்: ஹிட்லரிடமிருந்து ஜெர்மன் தேசிய இராணுவத்தை அமைப்பதற்கான கட்டளை பிறந்தது.
1944 – சோவியத் ஒன்றியம் செக்கொசுலவாக்கியாவை முற்றுகையிட்டுக் கைப்பற்றியது.
1945 – வெனிசுவேலாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து அதன் அதிபர் பதவியிழந்தார்.
1851 – இங்கிலாந்தில் பளிங்கு அரண்மனையில் அனைத்துலக வர்த்தகக் கண்காட்சி முடிவுற்றது.
1954 – டெக்சாஸ் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் முதலாவது டிரான்சிஸ்டர் வானொலியை அறிமுகப்படுத்தியது.
1967 – சோவியத் விண்கலம் வெனேரா 4 வீனஸ் கோளை அடைந்தது. வேறொரு கோளின் வளிமண்டலத்தை அளந்த முதலாவது விண்கலம் இதுவாகும்.
1991 – அசர்பைஜான் சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலையை அறிவித்து விலகியது.
1991 – நாகப்பட்டினம் மாவட்டம் அமைக்கப்பட்டது.
2006 – ஈழப்போர்: காலி கடற்படைத்தளத்தில் கடற்புலிகள் நடத்திய தாக்குதலில் பல கடற்படைக் கலங்கள் அழிக்கப்பட்டன.
பிறப்புக்கள்
1882 – பல்லடம் சஞ்சீவ ராவ் கருநாடக இசை புல்லாங்குழல் கலைஞர் (இ. 1962)
1910 – வி. நவரத்தினம், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் (இ. 2006)
1956 – மார்டினா நவரதிலோவா, டென்னிஸ் வீராங்கனை
1960 – ஜான் குளோட் வான் டாம், நடிகர்
1978 – ஜோதிகா, இந்தியத் திரைப்பட நடிகை
இறப்புகள்
1417 – பன்னிரண்டாம் கிரகோரி (திருத்தந்தை) (பி. 1326)
1871 – சாள்ஸ் பாபேஜ், பிரித்தானியக் கணிதவியலாளர் (பி. 1791)
1931 – தொமஸ் அல்வா எடிசன், அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர் (பி. 1847)
2004 – சந்தனக்கடத்தல் வீரப்பன், பி. 1952)
2015 – தமிழினி, விடுதலைப் புலிகளின் மகளிர் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவி (பி. 1972)
சிறப்பு நாள்
ஐக்கிய அமெரிக்கா – அலாஸ்கா நாள்