அக்டோபர் 7 (October 7)
கிரிகோரியன் ஆண்டின் 280 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 281 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 85 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1690 – ஆங்கிலேயர் கியூபெக் நகரைத் தாக்கினர்.
1737 – இந்தியா, வங்காளத்தில் கிளம்பிய 40 அடி உயர அலை சுமார் 300,000 பேரைக் கொன்றது.
1769 – ஆங்கிலேய நாடுகாண் பயணி கப்டன் ஜேம்ஸ் குக் நியூசிலாந்தைக் கண்டுபிடித்தான்.
1840 – இரண்டாம் வில்லியம் நெதர்லாந்தின் மன்னனாக முடிசூடினான்.
1874 – யாழ்ப்பாணத்துக்கான தந்தி இணைப்பு அநுராதபுரம் வரையில் நீடிக்கப்பட்டது.
1940 – இரண்டாம் உலகப் போர்: ஜேர்மனி ருமேனியாவைத் தாக்கியது.
1943 – இரண்டாம் உலகப் போர்: வேக் தீவில் கைப்பற்றப்பட்ட அமெரிக்கக் கைதிகள் 100 பேரை ஜப்பான் கொன்றது.
1949 – ஜேர்மன் ஜனநாயகக் குடியரசு உருவாக்கப்பட்டது.
1950 – சீனா திபெத்து மீதான தாக்குதலை ஆரம்பித்தது.
1951 – இஸ்ரேலிய அரசு டேவிட் பென்-கூரியன் என்பவரால் அமைக்கப்பட்டது.
1958 – பாகிஸ்தான் அதிபர் இஸ்காண்டர் மிர்சா ஜெனரல் அயூப் கான் ஆதரவுடன்
1959 – சோவியத் விண்கலம் லூனா 3 சந்திரனின் அதி தூரத்தியப் புகைப்படங்களை பூமிக்கு அனுப்பியது.
1962 – சோவியத் ஒன்றியம் நோவயா சிம்லியா என்ற இடத்தில் அணுக்கரு சோதனையை நிகழ்த்தியது.
பிறப்புக்கள்
1931 – டெஸ்மண்ட் டூட்டு, தென்னாபிரிக்க ஆயர், நோபல் பரிசு பெற்றவர்
1935 – தாமஸ் கெநீலி, ஆத்திரேலிய எழுத்தாளர்
1952 – விளாடிமிர் பூட்டின், ரஷ்ய முன்னாள் அதிபர்
1978 – சகீர் கான் , இந்திய வேகபந்து வீச்சாளர்.
1979 – நரேன், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
இறப்புகள்
1708 – குரு கோவிந்த் சிங், சீக்கிய குரு (பி. 1666)
1967 – நோர்மன் ஏஞ்செல், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1872)
1984 – அப்துல் காதர் லெப்பை, ஈழத்துக் கவிஞர் (பி. 1913)
1994 – நீல்ஸ் காஜ் ஜேர்ன், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1911)
சிறப்பு நாள்
கிழக்கு ஜெர்மனி – குடியரசு நாள்
east