வரலாற்றில் இன்று 22.11.2016
நவம்பர் 21 கிரிகோரியன் ஆண்டின் 326 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 326 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 39 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1574 – சிலியின் ஜுவான் பெர்னாண்டஸ் தீவுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
1908 – அல்பேனிய எழுத்துக்கள் அறிமுகப்படுத்தப்பட்டது.
1943 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கத் தலைவர் பிராங்கிளின் ரூஸ்வெல்ட், பிரிட்டன் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், சீனத் தலைவர் சியாங் காய்-செக் ஆகியோர் எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் சந்தித்தனர். 
1943 – லெபனான், பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.
1956 – ஒலிம்பிக் விளையாட்டுக்கள் மெல்போர்னில் ஆரம்பமாயின.
1963 – அமெரிக்க ஜனாதிபதி  கென்னடி, லீ ஹார்வி ஒஸ்வால்ட் என்பவனால் சுட்டுக் கொல்லப்பட்டார். 
john-f-kennedy
1975 – ஜுவான் கார்லொஸ் ஸ்பெயின் மன்னனானார்.
1989 – குண்டுவெடிப்பில் லெபனான் ஜனாதிபதி ரெனே மோவாட் கொல்லப்பட்டார்.
1990 – மார்கரட் தாட்சர் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் பதவியைத் துறந்தார்.
2005 – ஜேர்மனியின் முதலாவது பெண் அதிபராக (சான்சிலர்) ஏங்கலா மேர்க்கெல் தெரிவு செய்யப்பட்டார்.
2005 – எக்ஸ் பாக்ஸ் 360 நிகழ்பட விளையாட்டு இயந்திரம் வெளியிடப்பட்டது.
பிறப்புக்கள்
1830-ஜல்காரிபாய், இந்தியச் சுதந்திரப் போராட்ட வீராங்கனை (இ. 1890)
220px-jhalkaribai_stamp
1890 – சார்லஸ் டி கோல், பிரெஞ்சுத் தளபதியும், அரசியலாளரும் (இ. 1970)
1939 – முலாயம் சிங் யாதவ், இந்திய அரசியல்வாதி
muyhyam
இறப்புகள்
1963 – ஜான் எப். கென்னடி, 35-வது அமெரிக்க ஜனாதிபதி, (பி. 1917)
சிறப்பு நாள்
லெபனான் – விடுதலை நாள் (1943)