வரலாற்றில் இன்று 14.11.2016
நவம்பர் 14 கிரிகோரியன் ஆண்டின் 318 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 319 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 47 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
law-college
1885 – செர்பியா பல்கேரியா மீது போர் தொடுத்தது.
1918 – செக்கொஸ்லவாக்கியா குடியரசாகியது.
1922 – பிபிசி தனது வானொலி சேவையை ஐக்கிய இராச்சியத்தில் தொடக்கியது.
1956 – ஹங்கேரியில் போர் முடிவுக்கு வந்தது.
1969 – அப்போலோ 12 விண்கப்பல் மூன்று விண்வெளி வீரர்களுடன் சந்திரனை நோக்கிச் சென்றது.
1971 – மரைனர் 9 செவ்வாய் கோளை சென்றடைந்தது.
1975 – மேற்கு சகாராவை விட்டு ஸ்பெயின் விலகியது.
1990 – கிழக்கு ஜெர்மனி மற்றும் மேற்கு ஜெர்மனிகளின் இணைப்பிற்குப் பின்னர் போலந்துக்கும் ஜெர்மனிக்கும் இடையிலான எல்லைகள் வரையறுக்கப்பட்டன.
1996 – டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
2001 – ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலை ஆப்கான் கூட்டுப் படைகள் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தன.
பிறப்புகள்

1889 – ஜவகர்லால் நேரு, முதல் இந்தியப் பிரதமர், அரசியல்வாதி (இ. 1964)
1904 – ஹரால்ட் லார்வூட், ஆங்கிலேய-ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர் (இ. 1995)
1930 – எட்வேர்ட் வைட், நாசா விண்வெளி வீரர் (இ. 1967)
1948 – சார்லசு, வேல்சு இளவரசர்
1971 – அடம் கில்கிறிஸ்ற், ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர்
இறப்புகள்
565 – முதலாம் ஜஸ்டினியன், பைசாந்தியப் பேரரசன் (பி. 482)
683 – முதலாம் யசீத், உமையா கலீபா (பி. 647)
1716 – கோட்பிரீட் லைப்னிட்ஸ், செருமானியக் கணிதவியலர், மெய்யியலாளர் (பி. 1646)
1831 – எகல், ஜெர்மன் நாட்டு மெய்யியல் அறிஞர் (பி. 1770)
சிறப்பு நாள்
இந்தியா: குழந்தைகள் நாள்.
உலக நீரிழிவு நாள்
கூட்டுறவு வார விழா (இந்தியா) – (நவம்பர் 14 முதல் 20 முடிய)