வரலாற்றில் இன்று 08.12.2016
டிசம்பர் 8 கிரிகோரியன் ஆண்டின் 342 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 343 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 23 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1609 – ஐரோப்பாவின் இரண்டாவது பொது நூலகம் இத்தாலியின் மிலான் நகரில் நூலகம் திறக்கப்பட்டது.
1864 – இங்கிலாந்தில் கிளிஃப்டன் தொங்கு பாலம் திறக்கப்பட்டது.
1881 – ஆஸ்திரியாவில் வியென்னா நகரில் றிங் தியேட்டரில் இடம்பெற்ற தீயினால் 620 பேர் கொல்லப்பட்டனர்.
1912 – அல்பேனியாவின் “கோர்சே” நகரை ஓட்டோமான் படையிடம் இருந்து கிரேக்கர்கள் கைப்பற்றினர்.
1941 – இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியர்கள் ஹொங்கொங், மலாயா ஆகியவற்றைத் தாக்கினர்.
1941 – பசிபிக் போர்: பேர்ள் துறைமுகத்தை ஜப்பான் தாக்கியதை அடுத்து ஐக்கிய அமெரிக்கா ஜப்பான் மீது போரை அறிவித்தது.
1941 – பசிபிக் போர்: சீனக் குடியரசு ஜப்பான் மீது போரை அறிவித்தது.
1941 – இரண்டாம் உலகப் போர்: வேக் தீவு மீது ஜப்பான் முதற்தடவையாக போர் தொடுத்தது.
1949 – சீனக் குடியரசின் தலைநகர் நான்சிங்கில் இருந்து தாய்பெய் நகருக்கு மாற்றப்பட்டது.
1953 – அணு அமைதிக்கே என்று அமெரிக்க அதிபர் டுவைட் டி. ஐசனாவர் அறிவித்தார்.
1963 – மேரிலாதில் அமெரிக்க விமானம் ஒன்று வீழ்ந்ததில் 81 பேர் கொல்லப்பட்டனர்.
1966 – கிரேக்கக் கப்பல் ஒன்று மத்திய தரைக் கடலில் உள்ள ஆயிஜியன் கடலில் மூழ்கியதில் 200 பேர் கொல்லப்பட்டனர்.
1972 – சிக்காகோவில் விமானம் விபத்துக்குள்ளாகியதில் 45 பேர் கொல்லப்பட்டனர்.
1980 – பீட்டில்ஸ் இசைக்குழுவைச் சேர்ந்த ஜான் லெனன் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1985 – சார்க் அமைப்பு இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம், இலங்கை, நேபாளம், மாலைதீவு மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளினால் உருவாக்கப்பட்டது.
sark
1987 – பெருவின்  விமான விபத்து.  அதில் பயணஞ்செய்த பெருவின் கால்பந்தாட்ட அணியொன்றின் அனைத்து வீரர்களும் இறந்தனர்.
1991 – சோவியத் ஒன்றியத்தைக் கலைப்பதென ரஷ்யா, பெலாரஸ், உக்ரேன் ஆகிய நாடுகளின் தலைவர்கள் கூடி முடிவெடுத்தனர்.
1998 – அல்ஜீரியாவில் 81 பேர் ஆயுதக் குழுவொன்றினால் படுகொலை செய்யப்பட்டனர்.
பிறப்புக்கள்
1935 – தர்மேந்திரா, இந்திய நடிகர்
tharmendra
1946 – சர்மிளா தாகூர், இந்திய நடிகை
1947 – தாமஸ் சிச், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்
1976 – நிருபமா வைத்தியநாதன், இந்திய டென்னிஸ் வீராங்கனை
1985 – டுவைட் ஹவர்ட், அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்
இறப்புகள்
1980 – ஜான் லெனன், ஆங்கிலப் பாடலாசிரியர், இசையமைப்பாளர் (பி. 1940)
2014 – நேதுநூரி கிருஷ்ணமூர்த்தி, தென்னிந்திய கருநாடக இசைப் பாடகர், (பி. 1927)
சிறப்பு நாள்
ருமேனியா – அரசியல் சாசன நாள்
பல்கேரியா – மாணவர் நாள்
 
பனாமா – தாயார் தினம்
தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு தினம்.