சென்னை

மிழகத்தில்  இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 596 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,33,011 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 12,299 பேர் உயிர் இழந்து 8,15,516 பேர் குணம் அடைந்து தற்போது 5,196 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 166 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 2,29,705 பேர் பாதிக்கப்பட்டு 4,080 பேர் உயிர் இழந்து 2,23,783 பேர் குணம் அடைந்து தற்போது 1,842 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 53,863 பேர் பாதிக்கப்பட்டு 665 பேர் உயிர் இழந்து 52,670 பேர் குணம் அடைந்து தற்போது 528 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 51,102 பேர் பாதிக்கப்பட்டு 761 பேர் உயிர் இழந்து 49,964 பேர் குணம் அடைந்து தற்போது 377 பேர் சிகிச்சையில் உள்ளனர்.