சென்னை
தமிழகத்தில் இன்றைய (31/03/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் இன்று 2,579 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,86,673 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 12,719 பேர் உயிர் இழந்து 8,58,075 பேர் குணம் அடைந்து தற்போது 15,879 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
சென்னையில் மட்டும் இன்று 969 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதுவரை சென்னையில் 2,48,965 பேர் பாதிக்கப்பட்டு 4,243 பேர் உயிர் இழந்து 2,38,467 பேர் குணம் அடைந்து தற்போது 6,255 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 58,960 பேர் பாதிக்கப்பட்டு 694 பேர் உயிர் இழந்து 56,715 பேர் குணம் அடைந்து தற்போது 1,551 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது. இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 56,330 பேர் பாதிக்கப்பட்டு 818 பேர் உயிர் இழந்து 53,822 பேர் குணம் அடைந்து தற்போது 1,690 பேர் சிகிச்சையில் உள்ளனர்.