சென்னை

மிழகத்தில்  இன்றைய (27/04/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 15,830 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 11,13,802 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 13,728 பேர் உயிர் இழந்து 9,90,919 பேர் குணம் அடைந்து தற்போது 1,08,855 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 4,640 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 3,18,614 பேர் பாதிக்கப்பட்டு 4,629 பேர் உயிர் இழந்து 2,82,849 பேர் குணம் அடைந்து தற்போது 31,136 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 76,275 பேர் பாதிக்கப்பட்டு 923 பேர் உயிர் இழந்து 66,744 பேர் குணம் அடைந்து தற்போது 8,608 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 75,293 பேர் பாதிக்கப்பட்டு 717 பேர் உயிர் இழந்து 67,628 பேர் குணம் அடைந்து தற்போது 6,948 பேர் சிகிச்சையில் உள்ளனர்.