சென்னை

மிழகத்தில்  இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 945 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,17,077 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 12,109 .பேர் உயிர் இழந்து 7,96,353 பேர் குணம் அடைந்து தற்போது 8,615 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 275 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 2,25,252 பேர் பாதிக்கப்பட்டு 4,004 பேர் உயிர் இழந்து 2,18,570 பேர் குணம் அடைந்து தற்போது 2,678 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 52,247 பேர் பாதிக்கப்பட்டு 652 பேர் உயிர் இழந்து 50,774 பேர் குணம் அடைந்து தற்போது 821 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 49,956 பேர் பாதிக்கப்பட்டு 743 பேர் உயிர் இழந்து 48,630 பேர் குணம் அடைந்து தற்போது 583 பேர் சிகிச்சையில் உள்ளனர்.