சென்னை
தமிழகத்தில் இன்றைய (21/02/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் இன்று 452 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,48,275 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 12,460 பேர் உயிர் இழந்து 8,31,706 பேர் குணம் அடைந்து தற்போது 4,109 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
சென்னையில் மட்டும் இன்று 154 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதுவரை சென்னையில் 2,34,345 பேர் பாதிக்கப்பட்டு 4,138 பேர் உயிர் இழந்து 2,28,580 பேர் குணம் அடைந்து தற்போது 1,627 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 55,460 பேர் பாதிக்கப்பட்டு 679 பேர் உயிர் இழந்து 54,375 பேர் குணம் அடைந்து தற்போது 406 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது. இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 52,446 பேர் பாதிக்கப்பட்டு 777 பேர் உயிர் இழந்து 51,281 பேர் குணம் அடைந்து தற்போது 388 பேர் சிகிச்சையில் உள்ளனர்.